தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வரும் கங்கை அமரனின் மகன்தான் பிரேம்ஜி என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான சென்னை 600028, மங்காத்தா, கோவா போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அடுத்தது இவர் சத்திய சோதனை எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
காமெடி கலந்த ஜானரில் வெளியான இந்த படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து பிரேம்ஜி வல்லமை எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கருப்பையா முருகன் இதனை எழுதி, இயக்கி இருக்கிறார். ஜி.கே.வி இதற்கு இசையமைக்க கணேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். மேலும் இப்படத்தில் பிரேம்ஜியுடன் இணைந்து திவ்யதர்ஷினி, தீபா சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
எனவே இந்த படமானது வருகின்ற ஏப்ரல் 25ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி படத்தில் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது பிரேம்ஜி ஏற்கனவே நடித்த படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் வல்லமை திரைப்படத்தில், சீரியஸான கதாபாத்திரத்தில் காது கேளாதவராக நடித்துள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
- Advertisement -