Homeசெய்திகள்சினிமாகாதலியை கரம்பிடித்தார் நடிகர் பிரேம்ஜி... குவியும் வாழ்த்துக்கள்...

காதலியை கரம்பிடித்தார் நடிகர் பிரேம்ஜி… குவியும் வாழ்த்துக்கள்…

-

காதலியை கரம்பிடித்த நடிகர் பிரேம்ஜிக்கு, திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பன்முகக் திறமை கொண்டவரான கங்கை அமரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பெரியவர் வெங்கட் பிரபு. இவர், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். அதேபோல, இரண்டாவது மகன் பிரேம்ஜியும், பிரபல நடிகர் ஆவார். இதில் வெங்கட் பிரபுவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அதே சமயம், நடிகரும், இசை அமைப்பாளருமான பிரேம்ஜிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. முரட்டு சிங்கிள் என ரசிகர்கள் அவரை கொண்டாடுவது வழக்கமாகும்.

வெங்கட் பிரபு இயக்கும் பெரும்பாலான படங்களில் நடிகர் பிரேம்ஜிக்கு இடம் இருக்கும். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படத்திலும் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் 45 வயதாகும் பிரேம்ஜிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், அண்மையில் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து பிரேம்ஜிக்கு திருமணம் என்று அவரது அண்ணன் வெங்கட் பிரபுவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று ஜூன் 9-ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜி, தனது நீண்ட நாள் காதலியான இந்துவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வைபோகத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். திருமண வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நண்பர்களும், ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ