Homeசெய்திகள்சினிமாபிரேம்ஜிக்கு டும் டும் டும்... மணப்பெண் இவர் தானா...

பிரேம்ஜிக்கு டும் டும் டும்… மணப்பெண் இவர் தானா…

-

தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிள் நட்சத்திரமாக இருந்து வந்தவர் பிரேம்ஜி அமரன். கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் தம்பியுமான இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு எப்போது திருமணம் என தொடர்ந்து பல கேள்விகள் எழுந்தபோதிலும், மௌனம் காத்து வந்தார். ஆனால், திடீரென அண்மையில் நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக புத்தாண்டு அன்று அதிரடியாக ஒரு அறிவிப்பை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இது உண்மையாக இவர் கூறியதா இல்லை படத்தின் விளம்பரத்திற்காகவே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால், இது உண்மையான செய்தி தானாம். உண்மையாகவே இந்த ஆண்டு தை பிறந்தால் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளப் போகிறார். பிரேம்ஜியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்து இவர் தான் அவரா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

பின்னணி பாடகி வினைட்டா சிவக்குமாரை தான் பிரேம்ஜி அமரன் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி முடிவதற்குள் இருவரின் திருமணமும் கோலாகலமாக நடைபெற உள்ளது. மேலும், 44 வயதை கடந்த பிரேம்ஜிக்கு, 22 வயதுள்ள மணப்பெண்ணா, அதாவது 2கே கிட்டுடடன் பிரேம்ஜி திருமணமா என ரசிகர்கள் இணையதளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ