மலையாள மொழியின் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். 90-களில் தொடங்கி அவர் நடித்து வருகிறார். மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் அண்மைக் காலமாக வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார். கடந்த மாதம் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் நடிகர் பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது வில்லன் நடிப்பிற்கு வரவேற்பும் கிடைத்தது.
இதற்காக மலையாளத்தில் அவர் ஹீரோவாக வாங்கக்கூடிய தொகையை விட மிகப்பெரிய தொகை சலார் படத்தில் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி பெரிய பட்ஜெட் படங்களில் தான் ஒரு வேளை இவர் வில்லனாக நடிப்பாரோ என்று நினைக்கும்போதே, தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் குருவாயூர் அம்பலநடையில் என்ற சின்ன பட்ஜெட் படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்திருக்கிறார்.