Homeசெய்திகள்சினிமாமீண்டும் வில்லனாக நடிக்கும் பிருத்வி... குருவாயூர் அம்பலநடையில் முதல் தோற்றம் இதோ.. மீண்டும் வில்லனாக நடிக்கும் பிருத்வி… குருவாயூர் அம்பலநடையில் முதல் தோற்றம் இதோ..
மலையாளத்தில் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளவர் நடிகர் பிருத்விராஜ். 90-களில் தொடங்கி அவர் நடித்து வருகிறார். மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் அண்மைக் காலமாக வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார். கடந்த மாதம் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் நடிகர் பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது வில்லன் நடிப்பிற்கு வரவேற்பும் கிடைத்தது.
இதற்காக மலையாளத்தில் அவர் ஹீரோவாக வாங்கக்கூடிய தொகையை விட மிகப்பெரிய தொகை சலார் படத்தில் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி பெரிய பட்ஜெட் படங்களில் தான் ஒரு வேளை இவர் வில்லனாக நடிப்பாரோ என்று நினைக்கும்போதே, தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் குருவாயூர் அம்பலநடையில் என்ற சின்ன பட்ஜெட் படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.
வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் இயக்குநர் விபின் தாஸ் இந்த படத்தை இயக்குகிறார். அந்த படத்தில் நாயகனாக நடித்த மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் தான் இதிலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். படத்தில் தமிழ் நடிகர் யோகி பாபுவும் இணைந்துள்ளார். இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் தோற்றத்தை வௌியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.