அண்மை காலமாக தென்னிந்திய மொழிகளில் அவரவர் திரையுலகில் ஹீரோக்களாக நடித்து வரும் முன்னணி நடிகர்கள், மற்ற மொழிகளில் வில்லனாக நடிக்க மிகப்பெரிய சம்பளம் கொடுத்து அழைக்கும்போது மகிழ்ச்சியகா ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்கள். அப்படித்தான் விஜய்சேதுபதியின் நடி்பபு பயணம் புது ரூட்டில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் நடிகர் பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது வில்லன் நடிப்பிற்கு வரவேற்பும் கிடைத்தது.
இதற்காக மலையாளத்தில் அவ்ர ஹீரோவாக வாங்கக்கூடிய தொகையை விட மிகப்பெரிய தொகை சலார் படத்தில் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி பெரிய பட்ஜெட் படங்களில் தான் ஒரு வேளை இவர் வில்லனாக நடிப்பாரோ என்று நினைக்கும்போதே, தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் குருவாயூர் அம்பலநடையில் என்ற சின்ன பட்ஜெட் படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.
ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் இயக்குநர் விபின் தாஸ் இந்த படத்தை இயக்குகிறார். அந்த படத்தில் நாயகனாக நடித்த மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் தான் இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் பிருத்விராஜ் படப்பிடிப்பில் கலந்து கொள்வது வெறும் 12 நாட்கள் மட்டும் தான். ஏற்கனவே 70 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பில் பிருத்விராஜ் கலந்து கொண்டார்.