பிருத்விராஜின் ஆடு ஜீவிதம்… தள்ளிப்போகும் ஓடிடி ரிலீஸ்..
- Advertisement -

மோலிவுட் திரையுலகின் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். நடிகராக மட்டுமன்றி வில்லன் கதாபாத்திரங்களில் பிருத்விராஜ் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். முதலில் மலையாளப் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்த அவர் அடுத்து தெலுங்கு படமான சலார் திரைப்படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக நடித்தார். இதில், பிருத்வியின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதனிடையே நடிப்பை தவிர இயக்கத்திலும் பிருத்விராஜ் ஆர்வம் காட்டி வருகிறார்

பிருத்விராஜ் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம். அரபு நாட்டுக்கு வேலை செல்லும் கதாநாயகன் அங்கு ஆடு மேய்க்க விடப்பட்டு பாலைவனத்தில் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை. பிரபல எழுத்தாளர் பென் யாமின் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ப்ளஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார்.

இத்திரைப்படம் கடந்த மார்ச் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு சுமார் 160 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. மேலும், இத்திரைப்படம் வரும் 26-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், வெளியீடு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.