மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ். இவர் சமீபத்தில் வெளியான சலார் படத்தில் நடித்திருந்தார். அதே சமயம் இவர் நடித்துள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் குருவாயூர் அம்பள நடையில் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் பிரித்விராஜ்.
இவ்வாறு பிஸியாக நடித்து வரும் பிருத்விராஜ் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தை இயக்கினார். மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து லூசிபர் 2 – எம்புரான் படத்தை தற்போது இயக்கி வருகிறார் பிரித்விராஜ். மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Team ❤️ #L2E #EMPURAAN pic.twitter.com/cy0bCJhwWb
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) January 23, 2024
இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் சமீபத்தில் பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் எம்புரான் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் பிரித்திவிராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வெளியிட்டு அறிவித்துள்ளார்.