Homeசெய்திகள்சினிமாபிரித்விராஜின் பான் இந்தியா படம் 'ஆடு ஜீவிதம்'.... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரித்விராஜின் பான் இந்தியா படம் ‘ஆடு ஜீவிதம்’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

பிரித்விராஜின் பான் இந்தியா படம் 'ஆடு ஜீவிதம்'.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!மலையாள சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் ஒரு சேர வெற்றி நடை போட்டு வருகிறார் பிரித்திவிராஜ். இவர் பிரபாஸுடன் இணைந்து நடித்த சலார் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் பிரித்திவிராஜுக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரத்தை அளிக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் பிரித்திவிராஜ் நடிப்பில் பிளஸ்ஸி இயக்கத்தில் உருவாகி வரும் ஆடு ஜீவிதம் (The Goat Life) படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி சினிமா ஆர்வலர்களை வியப்படையை செய்தது. இந்த படத்தில் நஜீப் என்ற கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் நடித்து வருகிறார். கேரளாவில் இருந்து சௌதி அரேபியாவிற்கு வேலைக்காக செல்லும் பிரித்விராஜ் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு அடிமையாக மாற்றப்படுகிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது மாதிரியான சர்வைவல் படம் தான் ஆடு ஜீவிதம்.
பென்யமின் எழுதிய “கோட் டேஸ்” ,(Goat Days) எனும் நாவலை தழுவி எடுக்கப்படுகின்ற இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஷுவல் ரொமான்ஸ், இமேஜ் மேக்கர்ஸ், ஜெட் மீடியா புரோடக்சன், அல்டா குளோபல் மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. சுனில் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை செய்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இப்படத்தின் டீசர் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியதனால் நிச்சயம் இப்படம் பல விருதுகளை வெல்லும் வாய்ப்பு அதிகம். இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பான் இந்தியா படமாக பல்வேறு மொழிகளில் ஆடு ஜீவிதம் படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தைப் பற்றி சமீபத்தில் பேட்டி அளித்த படத்தின் இயக்குனர் “ஆடு ஜீவிதம் (The Goat Life) திரைப்படம் சர்வதேச அளவில் உருவாகி வருகிறது. இப்படம் உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்படுகிறது. ஆடு மேய்க்க அடிமையாக மாற்றப்படும் ஒரு இளைஞனுக்கு நடக்கும் நம்ப முடியாத விஷயங்களை இப்படத்தில் காட்டியுள்ளோம். உண்மையானது புனை கதையை விடவும் பயங்கரமானது. ஒரு வித்தியாசமான அனுபவத்தை திரையில் கொண்டு வர நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார். வெள்ளித்திரையில் தரமான சினிமா அனுபவத்தை காண ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ