Homeசெய்திகள்சினிமாகில்லி ரீ- ரிலீஸ் குறித்த தகவல்கள் உண்மையல்ல..... தயாரிப்பாளர் சொன்ன பதில்!

கில்லி ரீ- ரிலீஸ் குறித்த தகவல்கள் உண்மையல்ல….. தயாரிப்பாளர் சொன்ன பதில்!

-

கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. இந்த படத்தை தரணி இயக்கியிருந்த நிலையில் ஸ்ரீ சூர்யா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஏ எம் ரத்னம் படத்தை தயாரித்திருந்தார். கில்லி ரீ- ரிலீஸ் குறித்த தகவல்கள் உண்மையல்ல..... தயாரிப்பாளர் சொன்ன பதில்!இந்தப் படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, தாமு, ஜெனிபர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. படத்தில் இடம்பெற்ற காமெடிகளும் பாடல்களும் படத்திற்கு பெரிய அளவில் பலம் அளித்தது. இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதியுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எனவே கில்லி திரைப்படம் 4கே தரத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதன்படி 2024 ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி இப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.கில்லி ரீ- ரிலீஸ் குறித்த தகவல்கள் உண்மையல்ல..... தயாரிப்பாளர் சொன்ன பதில்! இந்நிலையில் இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் சமீபத்தில் நடந்த பேட்டியில், “கில்லி ரீ – ரிலீஸ் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மை அல்ல. யார் இப்படி பரப்பி விட்டார்கள் என்று தெரியவில்லை. இனி தான் ரீ- ரிலீஸ் தேதியை முடிவு செய்யப் போகிறோம். தற்போது வரை மார்ச் மாதத்தில் இறுதியிலே அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடக்கத்திலோ வெளியிடுவதற்கு தான் திட்டமிட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ