சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுடன் இணைந்து யோகி பாபு, கோவை சரளா, திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தின் வில்லன்களாக நட்டி நடராஜன் மற்றும் பாபி தியோல் நடிப்பதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வரலாற்று சரித்திர திரைப்படமாக உருவாகி வரும் கங்குவா 3D அனிமேஷனில் தயாராகி வருகிறது. மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் இது உருவாகி வருகிறது. கொடைக்கானலில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்ற இதன் படப்பிடிப்புகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் சூர்யாவின் பிறந்த நாளான நேற்றைய தினத்தில் கங்கு வா படத்தின் கிளிம்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதில் சூர்யாவின் தோற்றம் அனைவரையும் மிரள வைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இப்படம் அடுத்த ஆண்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் முன்னோட்டத்திற்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் க்ளிம்ஸ் வெளியான ஒரு மணி நேரத்திற்குள் 2.25 பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில், “கங்குவா திரைப்படம் ஜப்பான் கொரிய மற்றும் சீன மொழிகளில் டப் செய்யப்படாத இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் சூர்யாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இதன் பிறகு சூர்யாவை ஹாலிவுட் திரையுலகம் அணுகும் வாய்ப்பு இருக்கிறது. படத்தின் மையக்கருவானது உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அது பழமையான, பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளை கொண்டிருக்கும். கங்குவா இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகத்தின் கதைகள் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தின் வெற்றியை பொறுத்து அது உருவாக்கப்படும்” என்று கூறியுள்ளார்.