Homeசெய்திகள்சினிமாபுத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் 'கேம் சேஞ்சர்'.... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் ‘கேம் சேஞ்சர்’…. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார். புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் 'கேம் சேஞ்சர்'.... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இதற்கு இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் 'கேம் சேஞ்சர்'.... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்! இந்த படத்தில் ராம்சரண் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வருகின்றன. அதன்படி இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அமெரிக்காவில் நடைபெற்ற கேம் சேஞ்சர் பட நிகழ்ச்சியில் ட்ரைலர் குறித்த அப்டேட் கொடுத்திருக்கிறார்.புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகும் 'கேம் சேஞ்சர்'.... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்! “ஒரு படத்தின் மதிப்பை அந்த படத்தின் டிரைலர் தான் தீர்மானிக்கும். எனவே ட்ரைலரை உங்கள் முன் கொண்டு வர தயாராகி வருகிறோம். புத்தாண்டு தினத்தன்று கேம் சேஞ்சர் பட டிரைலரை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்திருக்கும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ