Homeசெய்திகள்சினிமாமிஷன் சாப்டர் 1 படக்குழுவினரை வாழ்த்திய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

மிஷன் சாப்டர் 1 படக்குழுவினரை வாழ்த்திய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

-

- Advertisement -

மிஷன் சாப்டர் 1 படக்குழுவினரை வாழ்த்திய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!அருண் விஜய் நடிப்பில் உருவான மிஷன் சாப்டர் 1 படமானது நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தன் மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டனுக்கு செல்லும் அருண் விஜயை அங்குள்ள போலீஸார்கள் ஜெயிலில் அடைக்கின்றனர். ஜெயிலில் இருந்து தப்பித்து எப்படி தன் மகளை சென்றடைகிறார் என்பதே படத்தின் கதையாகும். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அருண் விஜய் கதாபாத்திரத்திற்குள் பொருந்தி போயிருக்கிறார். அதே சமயம் ஆக்ஷன் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த நீண்ட நாட்களாக தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்றிருந்த ஏ.எல்.விஜய்க்கு இப்படம் சிறந்த கம்பக்காக அமைந்துள்ளது.

இந்நிலையில் மிஷன் சாப்டர் 1 பட குழுவினரை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வாழ்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மிஷன் சாப்டர் 1 படம் பார்த்தேன். தரமான சண்டைக் காட்சிகள் நிறைந்த எமோஷனல் கலவையுடன் வந்திருக்கிறது. ஜெயில் பிரேக்கிங் கதை என்பதால் சோர்வு இல்லாமல் பரபரப்பாக செல்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ