Homeசெய்திகள்சினிமா'ட்ரெயின்' படத்துல மிரட்டி இருக்காரு.... சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கிற படம்.... தயாரிப்பாளர் தாணு!

‘ட்ரெயின்’ படத்துல மிரட்டி இருக்காரு…. சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கிற படம்…. தயாரிப்பாளர் தாணு!

-

- Advertisement -

தயாரிப்பாளர் தாணு ட்ரெயின் படம் குறித்து பேசி உள்ளார்.'ட்ரெயின்' படத்துல மிரட்டி இருக்காரு.... சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கிற படம்.... தயாரிப்பாளர் தாணு!

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ஏஸ், காந்தி டாக்ஸ் போன்ற படங்கள் உருவாகி இருக்கிறது. இதற்கிடையில் இவர் மிஸ்கின், இயக்கத்தில் ட்ரெயின் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி உடன் இணைந்து டிம்பிள் ஹயோதி, வினய் ராய், சம்பத்ராஜ், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இயக்குனர் மிஸ்கினே இதன் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பௌசியா பாத்திமா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். 'ட்ரெயின்' படத்துல மிரட்டி இருக்காரு.... சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கிற படம்.... தயாரிப்பாளர் தாணு!இது தவிர இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பாடல் ஒன்றை பாடியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் டார்க் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி அவர், “ட்ரெயின் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குனர் மிஷ்கின் தான் இந்த படத்தில் இசை அமைத்திருக்கிறார். மிரட்டி இருக்கிறார். 'ட்ரெயின்' படத்துல மிரட்டி இருக்காரு.... சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கிற படம்.... தயாரிப்பாளர் தாணு!அவர் மிகப்பெரிய ஆத்மார்த்தமான கலைஞன். தொழில் பக்தி உள்ள கலைஞன். இந்தியாலயே எல்லோரும் ட்ரெயின் ஷெட் போட்டு இருப்பாங்க. அதில் 3 கம்பார்ட்மெண்ட் மட்டும் தான் போட்டு இருப்பாங்க. நாங்க இந்த படத்துல 8 கம்பார்ட்மென்ட் வரைக்கும் போட்டு இருக்கோம். ஸ்ருதிஹாசனின் பெர்ஃபார்மன்ஸ் பெரிய அளவில் பேசப்படும். விஜய் சேதுபதி வாழ்ந்து இருக்காரு. இது சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கக்கூடிய படம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ