Homeசெய்திகள்சினிமாதிரைப்படங்களுக்கு கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்.... விரைவில் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

திரைப்படங்களுக்கு கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்…. விரைவில் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

-

- Advertisement -

தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்க உறுப்பினர்களின் திரைப்படங்களுக்கு கட்டுப்பாடு விதித்து வரும் நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் விரைவில் ஆலோசனை செய்ய உள்ளனர்!திரைப்படங்களுக்கு கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்.... விரைவில் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

நடிகர் தனுஷின் திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை, புதிய படங்கள் தொடங்குவது என்றால் தயாரிப்பாளர் சங்கத்தை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன் நடிகர் விஷால் படத்திற்கும் இதே கட்டுப்பாடு என்பதையும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கையின் மூலமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது நடிகர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்பது வழக்கம். ஆனால் தற்போது எந்த விளக்கமும் கேட்காமல் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக செயல்படுவதை முன்னிறுத்தி ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.திரைப்படங்களுக்கு கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்.... விரைவில் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

ஜூன் மாதம் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்கத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தில் மறு சீரமைப்பு செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. எந்த பிரச்சனையையும் இரு சங்கங்களும் கலந்து பேசி முடிப்பது குறித்தும் பேசப்பட்டது. ஆனால் தற்போது தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

MUST READ