நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதேசமயம் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சிங்க நடை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இவர், டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது திரைப்படத்தில் நடிக்கப் போவதாகவும் இந்த படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது. அதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படமான புறநானூறு படத்தில் நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் நடிகர் சிவகார்த்திகேயன், SK23 படத்தினை முடித்துவிட்டு சுதா கொங்கராவின் புறநானூறு படத்தை நடிக்க இருக்கிறாராம். இதன்பிறகு தான் SK24 படத்தில் நடிப்பதாக பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் கூறியுள்ளாராம் சிவகார்த்திகேயன். ஆகையினால் புறநானூறு படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் சுதா கொங்கரா தான் புறநானூறு படத்தை விரைவில் தொடங்க வேண்டும் என சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி தருவதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.