Homeசெய்திகள்சினிமாபுரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திரையுலக பயணம்!

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திரையுலக பயணம்!

-

மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 5).புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திரையுலக பயணம்!

தமிழ் சினிமாவில் கடந்த 1960 ஆம் ஆண்டு ஒரு நடிகையாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் ஜெயலலிதா. படிப்பில் திறமைசாலியாக திகழ்ந்த இவர் கல்வியோடு கலையையும் சேர்த்து கற்றுக் கொண்டவர். அந்த வகையில் தனது நடனத்தால் அனைவரையும் கட்டி போட்டவர். அதேசமயம் நடிப்பிலும் திரை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர். தமிழில் இவர் வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி என ஏகப்பட்ட நடிகர்களுடன் நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திரையுலக பயணம்!அதே சமயம் இவரது வருகைக்குப் பின்னர் தான் தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்சிகள் வந்தன. இவர் வந்த பிறகுதான் மற்ற நடிகைகளும் கவர்ச்சியாக நடிக்க போட்டி போட்டு நடித்தனர். வெண்ணிற ஆடை தவிர நான், காவல்காரன், வைரம், மூன்றெழுத்து என பல படங்களில் கவர்ச்சியாக நடித்திருப்பார். அதேசமயம் ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 23 படங்களில் நடித்து திரை உலகில் கோலாச்சி செய்தார். எம்ஜிஆர் – ஜெயலலிதா காம்போ என்றாலே அது நிச்சயம் கிளாசிக் ஹிட் வரிசையில் இடம் பிடித்திருக்கும். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திரையுலக பயணம்!அந்த வகையில் இவர்களின் காம்போவிற்கு எல்லையில்லாத ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது. இருவரும் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்தனர். மேலும் ஜெயலலிதா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் ஸ்டார் நடிகையாக தன்னுடைய அடையாளத்தை நிலை நாட்டினார். பட்டிக்காடா பட்டணமா, அடிமைப்பெண், எங்கிருந்தோ வந்தாள் என பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு விருதுகளை அள்ளியுள்ளார். தொடர்ந்து திருமாங்கல்யம் என்ற திரைப்படம் ஜெயலலிதாவிற்கு 100வது படமாக அமைந்தது. அந்த படத்தில் மூன்று பாடல்களை பாடி ஒரு பாடகியாகவும் உருவெடுத்தார் ஜெயலலிதா.புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திரையுலக பயணம்! அடுத்தது 1980ல் வெளியான நதியை தேடி வந்த கடல் படம் இவருடைய கடைசி படமாகும். இவ்வாறு ஜெயலலிதா திரைத்துறையில் படைத்த சாதனைகள் பல. எனவே ஜெயலலிதா இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தாலும் திரையுலகில் அவர் படைத்த சாதனைகளும் ஒரு நடிகையாக அவர் ஆற்றிய பங்களிப்பும் என்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காமல் நிலைத்து நிற்கும்.

MUST READ