Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' ஓடிடி ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

‘புஷ்பா 2’ ஓடிடி ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

-

- Advertisement -

புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.'புஷ்பா 2' ஓடிடி ரிலீஸ் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தினை சுகுமார் இயக்க இதில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்க சாம் சி எஸ் இந்த படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை கவனித்திருந்தார். புஷ்பா பாகம் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் இந்த படம் ரூ. 1500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

இதற்கிடையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது தொடர்பாக புஷ்பா 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில், “புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த வதந்திகள் பரவி வருகிறது. இந்த படத்தை பெரிய திரைகளில் கண்டு மகிழுங்கள். இப்படம் 56 நாட்கள் முன்பாக எந்த ஓடிடியிலும் வெளியாகாது” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புஷ்பா 2 பட ஓடிடி ரிலீஸ் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

MUST READ