Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போன புஷ்பா 2 ரிலீஸ்... தயாரிப்பாளருக்கு ரூ.40 கோடி இழப்பு...

தள்ளிப்போன புஷ்பா 2 ரிலீஸ்… தயாரிப்பாளருக்கு ரூ.40 கோடி இழப்பு…

-

- Advertisement -
புஷ்பா இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் தயாரிப்பாளருக்கு சுமார் 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் வௌியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இப்படத்தை, பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தான நடித்திருப்பார். சுனில், ஃபகத் பாசில், பிரசாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்தித்தில் நடித்திருந்தனர். தேவி 2 பிரசாத் படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் புஷ்பா 2 தி ரூல். படத்தின் படப்பிடிப்பும் இன்று வரை முடிவடையாமல் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது. இருப்பினும், படத்திற்கான புரமோசன் பணிகளும் அவ்வப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஓடிடி உரிமம், டிஜிட்டல் ரைட்ஸ் என பட வெளியீட்டுக்கு முன்பு புஷ்பா இரண்டாம் பாகத்திற்கு லாபம் வந்துவிட்டது.

இத்திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி வௌியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் படப்பிடிப்பு தாமதம் உள்ளிட்ட காரணங்களால் புஷ்பா இரண்டாம் பாகத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் 24-ம் தேதி புஷ்பா 2 வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இதனால், தயாரிப்பு நிறுவனத்திற்கு சுமார் 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ