புஷ்பா 2 தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 எனும் திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட இந்த படத்தை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.இதில் வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ஐந்து நாட்களில் 922 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இன்னும் சில நாட்களில் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அல்லு அர்ஜுன் இந்த படத்தை தனது தோளில் தாங்கிப் பிடித்துள்ளார். அவருக்கு இணையாக நடிகர் பகத் பாசில் தனது வில்லத்தனத்தில் மிரட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதன்படி நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் பன்வர் சிங் ஷெகாவத் என்ற கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இந்நிலையில் கர்னி சேனா அமைப்பின் தலைவர் ராஜ் ஷெகாவத்,
புஷ்பா 2 திரைப்படம் ஷெகாவத் சமூகத்தை இழிவுப்படுத்தி விட்டதாகவும் ஷெகாவத் என்ற வார்த்தையை புஷ்பா 2 படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அப்படி நீக்கவில்லை என்றால் தயாரிப்பாளர்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்படும் எனவும் தேவைப்பட்டால் எந்த எல்லைக்கும் செல்வோம் எனவும் மிரட்டியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.