Homeசெய்திகள்சினிமாதுணை நடிகையின் தற்கொலை வழக்கில்  கைது செய்யப்பட்ட புஷ்பா பட நடிகர்!

துணை நடிகையின் தற்கொலை வழக்கில்  கைது செய்யப்பட்ட புஷ்பா பட நடிகர்!

-

- Advertisement -

புஷ்பா படத்தில் நடித்த நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.துணை நடிகையின் தற்கொலை வழக்கில்  கைது செய்யப்பட்ட புஷ்பா பட நடிகர்!

கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் வெளியான இந்த படம் தெலுங்கு , கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனின் நண்பனாக நடித்திருந்த ஜெகதீஷ் என்பவர் தற்போது துணை நடிகையின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா படத்தில் கேசவா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெகதீஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அதுமட்டுமில்லாமல் புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.துணை நடிகையின் தற்கொலை வழக்கில்  கைது செய்யப்பட்ட புஷ்பா பட நடிகர்!அதே சமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெலுங்கு சினிமாவின் துணை நடிகை ஒருவர், ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாகவும் அவரின் வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார் இந்த ஜெகதீஷ். ஒரு கட்டத்தில் இவரின் மிரட்டல் அதிகமான நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான அந்த துணை நடிகை கடந்த நவம்பர் 29ஆம் நாளில் தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமான வழக்கில் நடிகர் ஜெகதீஷ் மீது புகார் அளிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக போலீசார் ஜெகதீஷை வலை வீசி தேடி வந்தனர். கடைசியாக நேற்று பஞ்சகுட்டா காவல்துறையினரால் நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி அவரை சிறையில் அடைக்கும்படி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

MUST READ