தெலுங்கு திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுகுமார். அந்த வகையில் இவர் ரங்கஸ்தலம், புஷ்பா ஆகிய பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். கடைசியாக இவரது இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து இயக்குனர் சுகுமார், ராம் சரண் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் புஷ்பா 3 படத்திலே எடுக்கவும் திட்டமிட்டுள்ளார் சுகுமார்.
Dir Sukumar Recent
– Which actor will you use to make Pushpa & #Pushpa2 in Tamil?
– #ThalapathyVijay – #Ajithkumar – #Karthi All three of these people have a plan to make a living. I like all three of these people.#Pushpa3
pic.twitter.com/bJba144916— Movie Tamil (@MovieTamil4) April 2, 2025
இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் சுகுமாரிடம், தமிழில் எந்த நடிகரை வைத்து புஷ்பா, புஷ்பா 2 ஆகிய படங்களைப் போல் பெரிய பட்ஜெட் படம் எடுப்பீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இயக்குனர் சுகுமார், “விஜய், அஜித், கார்த்தி ஆகிய மூன்று நடிகர்களையும் எனக்கு பிடிக்கும். இவர்கள் மூவரையும் வைத்து படம் பண்ண திட்டம் இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.