புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமானது. அந்த வகையில் இந்த படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சுகுமார் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். புஷ்பா 2 – தி ரூல் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படமானது 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் புஷ்பா புஷ்பா எனும் முதல் பாடலை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடலை நாகாஷ் ஆசிஷ் , தீபக் ப்ளூ ஆகியோர் இணைந்து பாடியுள்ள நிலையில் விவேகா இதன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.