Homeசெய்திகள்சினிமா'SK21' படத்தின் அட்டகாசமான அப்டேட்டை கொடுத்த ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம்!

‘SK21’ படத்தின் அட்டகாசமான அப்டேட்டை கொடுத்த ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம்!

-

- Advertisement -

SK21 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

'SK21' படத்தின் அட்டகாசமான அப்டேட்டை கொடுத்த ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம்!நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். தற்காலிகமாக SK21 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மேலும் இதில் வில்லனாக ராகுல் போஸ் நடிக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படம் இந்தியர்களின் பெருமையை பேசும் படமாக தயாராகி வருகிறது. படத்திற்கு ஜிபி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் SK21 படத்தின் புதிய அப்டேட்டை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 5 மணி அளவில் SK21 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ