நடிகர் தனுஷ் கடைசியாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து தனுஷ் தனது 50வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன் , காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன் , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின்னர் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் படத்தின் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. அடுத்ததாக இந்த படம் 2024 ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் ரீ ரெக்கார்டிங் பணிகளை கவனித்து வந்ததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அதனால் படத்தின் ரிலீஸை ஒத்தி வைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஜூன் 1ஆம் தேதி இதன் இசை வெளியீட்டு விழாவை ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடத்த பட குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் அதை நாளில் இந்தியன் 2 படத்தில் இசை வெளியீட்டு விழா நடந்ததால் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் புதிய தகவல் என்னவென்றால் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.