Homeசெய்திகள்சினிமாஜேசன் சஞ்சய் இயக்கத்தில் 'ராயன்' பட நடிகர்!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் ‘ராயன்’ பட நடிகர்!

-

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக உருவெடுத்துள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் 'ராயன்' பட நடிகர்!அதன்படி ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்துடன் கைகோர்க்க இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பும் வெளியானது. அதன் பின்னர் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் புதிய படத்தில் யார் ஹீரோவாக நடிக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது. சமூக வலைதளங்களில் துருவ் விக்ரம், கவின் போன்ற பல இளம் நடிகர்களின் பெயர்களும் அடிபட்டது. மேலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜேசன் சஞ்சய் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள படம் கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களம் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வந்தன. ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் 'ராயன்' பட நடிகர்!இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகி வருகின்றன. அதே சமயம் இவர்களது கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படமானது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக இருக்கிறது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருக்கும் நடிகர் சந்தீப் கிஷன், கடைசியாக தனுஷுடன் இணைந்து ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ