Homeசெய்திகள்சினிமா'சூர்யா 44' படத்தில் இணைந்த ராயன் பட பிரபலம்!

‘சூர்யா 44’ படத்தில் இணைந்த ராயன் பட பிரபலம்!

-

சூர்யா 44 படத்தில் ராயன் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.'சூர்யா 44' படத்தில் இணைந்த ராயன் பட பிரபலம்!

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படமானது ஏற்கனவே வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கடும் போட்டி காரணமாக இதன் ரிலீஸ் தேதி நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட உள்ளது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகினார். அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் அந்தமான் பகுதியில் தொடங்கப்பட்டு ஊட்டி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 'சூர்யா 44' படத்தில் இணைந்த ராயன் பட பிரபலம்!அதாவது சூர்யா 44 திரைப்படத்தில் ஏற்கனவே சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் இதில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பிரகாஷ்ராஜ் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சூர்யா 44 திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம் என்ன கதாபாத்திரமாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ