நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ராயன். தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளார். மாஸான கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் தனுசுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. அதைத் தொடர்ந்து படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி ராயன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும்
வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ராயன் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இருப்பினும் ஏ சான்றிதழ் பெற்ற பிறகும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதாகவும் ட்ரைலருக்காக காத்துக் கொண்டிருப்பதாகவம் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ராயன் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் எனவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.