spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரேஸ் நாளில் அஜித் & டீம்..... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!

ரேஸ் நாளில் அஜித் & டீம்….. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் அஜித்துக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ரேஸ் நாளில் அஜித் & டீம்..... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!நடிகர் அஜித் சினிமாவில் கவனம் செலுத்துவதோடு கார் ரேஸிங்கிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சிறுவயதிலிருந்தே கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு வருகிறார். அதேசமயம் இடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக சில வருடங்கள் கார் ரேஸிங்கில் கலந்து கொள்ளாமல் சினிமாவில் மட்டுமே நடித்து வந்தார் அஜித். தற்போது 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸிங்கில் கலந்து கொள்கிறார். அதன்படி அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் அணி ஒன்றை தொடங்கி அந்த அணியின் முதன்மை ஓட்டுனராக செயல்படுகிறார் அஜித். ரேஸ் நாளில் அஜித் & டீம்..... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!மேலும் அஜித் & டீம் இன்று (ஜனவரி 11) துபாயில் நடைபெறும் 24H Series ரேஸிங்கில் கலந்து கொள்கின்றனர். இந்த ரேஸிங்கில் 24 மணி நேரத்தில் அதிக சுற்றுகளை நிறைவு செய்யும் அணிதான் வெற்றியாளராக மகுடம் சூட்டப்படுவர். நடிகர் அஜித் மற்றும் அவரது அணியினர் கடந்த சில நாட்களாக அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டனர். மேலும் தகுதி சுற்றில் அஜித் குமாரின் அணி 7வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த ரேஸிங்கில் நடிகர் அஜித் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ரேஸ் நாளில் அஜித் & டீம்..... வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களும் உருவாகி இருக்கிறது. அதில் விடாமுயற்சி திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என சொல்லப்படும் நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ