நடிகை ராதிகா போர் தொழில் படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து ‘போர் தொழில்‘ படத்தில் நடித்துள்ளனர்.
அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த மே 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வெளியான 10 நாட்களில் 23.10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
மேலும் இத்திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதன் திரைக்கதையும் வசனங்களும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் அளிக்கிறது. இந்த படம் ராட்சசன் படத்திற்கு பிறகு முக்கியமான சைக்கோ திரில்லர் படமாக பேசப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ராதிகா சரத்குமார் ‘போர்தொழில்’ படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்” ஒரு நாள் என் கணவர் வீட்டிற்கு வந்து இயக்குனர் விக்னேஷ் ராஜா நிச்சயம் ஒரு நாள் பெரிய ஆளாக வருவார் என்று கூறினார். கனமழையிலும் ரசிகர்கள் படத்தை காண வந்து கொண்டிருந்தார்கள்.
நன்றாக எழுதிய இயக்கப்பட்ட இத்திரைப்படத்தை பாராட்டுகிறேன். மேலும் சரத்குமார், அசோக் செல்வன், விக்னேஷ் ராஜா உள்ளிட்ட படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.