Homeசெய்திகள்சினிமாவிரைவில் வருகிறது ராதிகாவின் புதிய சீரியல்..... புது பொலிவுடன் களமிறங்கும் பொதிகை டிவி!

விரைவில் வருகிறது ராதிகாவின் புதிய சீரியல்….. புது பொலிவுடன் களமிறங்கும் பொதிகை டிவி!

-

- Advertisement -

விரைவில் வருகிறது ராதிகாவின் புதிய சீரியல்..... புது பொலிவுடன் களமிறங்கும் பொதிகை டிவி!தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியாக இருந்தாலும் சரி, சன் டிவியாக இருந்தாலும் சரி, ஜீ தமிழ் தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி ஒரு சில
குறிப்பிட்ட சீரியல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் அதிகமாகவே இருக்கும்.

அந்த வகையில் நடிகை ராதிகா சரத்குமார், சீரியல்களில் நடித்தாலும் அந்த சீரியல்கள் இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்து, ரசிகர் கூட்டத்தை தன் பக்கம் சேர்த்து வைத்திருக்கும். அண்ணாமலை, சித்தி, செல்வி, அரசி வாணி ராணி உள்ளிட்ட ராதிகா சரத்குமாரின் சீரியல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியலில் ராதிகா சரத்குமார் நடித்திருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார் ராதிகா. அதன்பின் சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தாயம்மா என்னும் புதிய சீரியலில் நடிக்க உள்ளார். விரைவில் வருகிறது ராதிகாவின் புதிய சீரியல்..... புது பொலிவுடன் களமிறங்கும் பொதிகை டிவி!இந்த சீரியல் பிரபல பொதிகை டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. 1990 காலம் கட்டங்களின் முன்பில் இருந்தே பொதிகை டிவிக்கு தனி மவுசு உண்டு. பொதிகை டிவியில் ஒளிபரப்பாகும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். உலக நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் ஒரு ஜன்னல் மாதிரி இருந்தது பொதிகை டிவி தான். நாளடைவில் நிறைய டிஜிட்டல் சேனல்களின் வரவால் பொதிகை சேனலின் புகழ் குறைய ஆரம்பித்தது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொதிகை டிவி மீண்டும் களமிறங்க தயாராகியுள்ளது. பார்வையாளர்களை கவர்வதற்காக புது புது சீரியல்களை களமிறக்க உள்ளது.

மேலும் ராதிகாவின் ‘தாயம்மா‘ சீரியலை ராதா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சீரியல் குடும்ப கதையின் பின்னணியில் உருவாக உள்ளது. இரு மகள்களின் தாயாக நடிக்கிறார் ராதிகா சரத்குமார். மகள்களை வளர்ப்பதில் ஏற்படும் பல சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும் தாயாக, தாய் அம்மாவாக வரப்போகிறார் ராதிகா சரத்குமார். மேலும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ