கலக்கப்போவது யாரு பாலா அறக்கட்டளைக்கு ராகவா லாரன்ஸ் 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பின்னணி நடனக் கலைஞராக வாழ்வைத் துவங்கி நடன இயக்குனராக வளர்ந்து, இயக்குனராக மாறி தற்போது நடிகராக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ராகவா லாரன்ஸ். நடிகர் என்பதையும் தாண்டி தனது மனிதநேய உதவிகளுக்காக மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுபவர் லாரன்ஸ்.
மாற்றுத்திறனாளிகளுக்காகவே அவர் வாழ்நாள் முழுவதும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகள் அனைவரும் லாரன்ஸை தங்களது இன்ஸபிரேஷனாக பார்த்து வரும் அளவிற்கு உதவிகள் செய்துள்ளார், செய்தும் வருகிறார்.
இந்நிலையில் கலக்கப்போவது யாரு பாலா அறக்கட்டளைக்கு லாரன்ஸ் 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார். தனது தாயார் கையால் இந்த நல்ல செயலை அவர் செய்துள்ளார்.
காமெடியனாக நமக்கு தெரிந்த பாலா, மறுபுறம் நல்ல மனிதநேயம்மிக்க மனிதர் என்பதையும் நிரூபித்துள்ளார். அவர் ஆதரவற்ற 25 சிறுவர்களை வளர்த்து வருகிறார். இது பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பாலாவின் நல்ல முன்னெடுப்பை அறிந்த லாரன்ஸ் 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.