Homeசெய்திகள்சினிமாசொன்ன வாக்கை காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்.....'படை தலைவன்' படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சொன்ன வாக்கை காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்…..’படை தலைவன்’ படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவிற்கு பின்னர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம் தான் படை தலைவன்.சொன்ன வாக்கை காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்.....'படை தலைவன்' படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! சகாப்தம், மதுரவீரன் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சண்முக பாண்டியன் நடிக்கும் மூன்றாவது படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தை அன்பு எழுதி இயக்குகிறார். படத்தில் சண்முக பாண்டியன் தவிர எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை வி ஜே கம்பைன்ஸ் நிறுவன மும் சுமீத் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியானது. சொன்ன வாக்கை காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்.....'படை தலைவன்' படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அதன்படி இந்த படம் காட்டு யானைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார் என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதாவது கேப்டன் விஜயகாந்தின் மறைவின் போது நடிகர் ராகவா லாரன்ஸ், சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலாக இருந்தாலும் நடிக்க தயார் என்று கூறியிருந்தார். சொன்ன வாக்கை காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்.....'படை தலைவன்' படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அதன்படி ராகவா லாரன்ஸ் சொன்ன வாக்கை காப்பாற்றி சண்முக பாண்டியனின் படை தலைவன் படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளார்.

MUST READ