Homeசெய்திகள்சினிமா'ஒரிஜினல் சந்திரமுகி கங்கனா ரணாவத் தான்...ஜோதிகா இல்லை '...... நடிகர் ராகவா லாரன்ஸ்!

‘ஒரிஜினல் சந்திரமுகி கங்கனா ரணாவத் தான்…ஜோதிகா இல்லை ‘…… நடிகர் ராகவா லாரன்ஸ்!

-

- Advertisement -

கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி வாசு இயக்கியுள்ளார். சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமிமேனன், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. எம் எம் கீரவாணி இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுடைய கலவையான விமர்சனங்களை பெற்றது.

மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தில் பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த ப்ரமோஷன் விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், ” ஒரிஜினல் சந்திரமுகி கங்கனா ரனாவத் தான். முதல் பாகத்தில் ஜோதிகா தன்னை சந்திரமுகியாக நினைத்துக் கொண்டவர் . ஒரிஜினல் சந்திரமுகி இல்லை. ஆனால் இரண்டாம் பாகத்தில் கங்கனா சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பார்க்கும் போது உங்களுக்கு புரியும்” என்று கூறியுள்ளார்.

MUST READ