Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2' அப்டேட்... ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு!

ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ அப்டேட்… ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு!

-

- Advertisement -

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. .

கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ திரைப்படம் இமாலய வெற்றி பெற்றது. ரீமேக் படமாக இருந்தாலும் அசுர வெற்றி பெற்று இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்நிலையில் படம் வெளியாகி 17 ஆண்டுகள் கழித்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். பி வாசு இயக்கத்தில் உருவாகும் இந்த படம் வேட்டையன் மற்றும் சந்திரமுகி இடையேயான கதைக்களத்தை கொண்டு உருவாகி வருகிறது.

லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் வடிவேலுவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

நடிகை கங்கனா ரணாவத் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சந்திரமுகி 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

படத்தின் 90% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் படத்தை நவம்பர் 30-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

MUST READ