ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஹண்டர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
ராகவா லாரன்ஸ் கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். அதேசமயம் அயோக்யா படத்தின் இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கோல்ட் மைன்ஸ் நிறுவனமும் சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இந்த படம் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் உருவாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த படம் 2025 கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான பல தகவல்களை இயக்குனர் வெங்கட் மோகன் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, ” ஹண்டர் திரைப்படம் வனவிலங்கு சாகச திரைப்படமாகும். ராகவா லாரன்ஸ் முதன் முறையாக இந்த படத்தில் நடிக்கிறார். மேலும் பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் வில்லனாகவும் ஹீரோயினாகவும் நடிக்க உள்ளனர். இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்தப் படம் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவை மையப்படுத்தியது.
ஒன்று ராகவா லாரன்ஸ் மற்றொன்று புலி. இதில் ராகவா லாரன்ஸுக்கு குறைந்தபட்ச டயலாக் தான் இருக்கும். அதேசமயம் இது ஸ்ட்ராங்கான ரோல். இந்த படத்தில் லாரன்ஸ் இரண்டு தோற்றங்களில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.