நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு சந்திரமுகி 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. அதில் சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் (BENZ) எனும் படத்தில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். அதேசமயம் விஷால் நடிப்பில் வெளியான அயோக்யா படத்தின் மூலம் பிரபலமடைந்த வெங்கட் மோகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கோல்ட் மைன்ஸ் நிறுவனமும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனிக்க இருக்கிறார்.
ராகவா லாரன்ஸின் 25வது படமாக உருவாக உள்ள இந்த படத்திற்கு ஹண்டர் (HUNTER) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பு போஸ்டரை பட குழுவினர் தமிழ் புத்தாண்டு தின ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் THE BATTLE FOR THE SOUL என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -