Homeசெய்திகள்சினிமாலோகேஷ் கனகராஜின் எல்சியு - வில் இணையும் ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்'.... லேட்டஸ்ட் அப்டேட்!

லோகேஷ் கனகராஜின் எல்சியு – வில் இணையும் ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

ராகவா லாரன்ஸின் பென்ஸ் திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு -வில் இணையப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.லோகேஷ் கனகராஜின் எல்சியு - வில் இணையும் ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்'.... லேட்டஸ்ட் அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் உருவெடுத்த லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்ற நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக உள்ள பென்ஸ் எனும் திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார். அதே சமயம் இந்த படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் திரைக்கதை எழுதுகிறார். ஆனால் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் தான் படத்தினை இயக்குகிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லோகேஷ் கனகராஜின் எல்சியு - வில் இணையும் ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்'.... லேட்டஸ்ட் அப்டேட்!அதைத்தொடர்ந்து இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படமானது லோகேஷ் கனகராஜன் எல்சியு- வில் இணைய இருக்கிறதாம். அதாவது லோகேஷ் கனகராஜ், எல்சியு என்ற கான்செப்டை உருவாக்கி அதன் கீழ் தனது கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது அந்த வரிசையில் ராகவா லாரன்ஸின் பென்ஸ் திரைப்படம் இணைய இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ