Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்ஸ் இயக்கும் 'காஞ்சனா 4' .... சென்னையில் படமாக்கப்படும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி!

ராகவா லாரன்ஸ் இயக்கும் ‘காஞ்சனா 4’ …. சென்னையில் படமாக்கப்படும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி!

-

- Advertisement -

காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 4 .... சென்னையில் படமாக்கப்படும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி!

ராகவா லாரன்ஸ் இயக்கியிருந்த முனி, காஞ்சனா 1, 2, 3 ஆகிய படங்கள் காமெடி கலந்த ஹாரர் ஜானரில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ், காஞ்சனா 4 திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து நோரா ஃபதேஹி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 4 .... சென்னையில் படமாக்கப்படும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி! அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை கேரளாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 4 .... சென்னையில் படமாக்கப்படும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி!அதேசமயம் தற்போது சென்னையில் இந்த படத்தின் பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ