Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட நடிகர்!

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட நடிகர்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் கடந்த ஜூலை 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மாவீரன் திரைப்படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன், ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பாக தொடங்கி, காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன், காஷ்மீரில் இருந்து சென்னைக்கு மாவீரன் பிரீ ரிலீஸ் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார் என்றும், பின் மீண்டும் படப்பிடிப்பில் இணைய காஷ்மீருக்கு திரும்பி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதன் கூடுதல் தகவலாக, இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் நடித்திருந்த ராகுல் போஸ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ