Homeசெய்திகள்சினிமா‘ஆர்ஆர்ஆர்’ பார்ட்- 2 கட்டாயம் இருக்கு… உறுதி அளித்த ராஜமௌலியின் தந்தை!

‘ஆர்ஆர்ஆர்’ பார்ட்- 2 கட்டாயம் இருக்கு… உறுதி அளித்த ராஜமௌலியின் தந்தை!

-

ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. பான் இந்தியா அளவில் மட்டுமல்லாமல் உலகளவில் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆஸ்கர் வரை சென்று விருதுகளை அள்ளியது.
அதையடுத்து ராஜமௌலி இயக்கத்தில் வெளியாக இருக்கும் அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ராஜமௌலி தற்போது மகேஷ் பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்குவதற்கான வேலைகளை பார்த்து வருகிறார். இந்தப் படம் முடிந்த உடன் ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
அந்தப் படத்தை ராஜமௌலி இயக்கலாம் அல்லது அவரது தலைமையின் கீழ் மற்றொருவர் இயக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் படங்களை அடுத்து ராஜமௌலி தனது கனவு திட்டமான மகாபாரதம் படத்தை கண்டிப்பாக இயக்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜமௌலி வரலாற்று படங்கள் இயக்குவதில் வல்லவர் என்று தெரியும். எனவே அவர் மகாபாரதம் படத்தை இயக்கினால் நிச்சயம் அது பிரம்மாண்ட விருந்தாக அமையும் என்று தற்போது எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

MUST READ