Homeசெய்திகள்சினிமாடைனோசரை இன்டர்வியூ எடுக்கும் ராஜமௌலி... சலார் நேர்காணல் ப்ரோமோ வெளியீடு!

டைனோசரை இன்டர்வியூ எடுக்கும் ராஜமௌலி… சலார் நேர்காணல் ப்ரோமோ வெளியீடு!

-

- Advertisement -

டைனோசரை இன்டர்வியூ எடுக்கும் ராஜமௌலி... சலார் நேர்காணல் விரைவில்!கே.ஜி.எஃப் 1,2 படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வருகிற 22ஆம் தேதி சலார் திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் வேலைகள் சூடு பிடித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரத்யேக இன்டர்வியூ ஒன்று ரெடியாகி உள்ளது. அதில் படத்தின் நாயகன் பிரபாஸ், பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த இன்டர்வியூவை இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படும் ராஜமௌலி நடத்துகிறார். இதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ப்ரோமோ வீடியோவில் பிரசாந்த் நீலிடம் கே ஜி எஃப் படத்துக்கும் சலாருக்கும் ஏதேனும் கனெக்ஷன் உள்ளதா, ரசிகர்களை இப்போதே சலார், டைனோசர் என்று புலம்ப வைத்து விட்டீர்களே என்பது போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கும் சலார் படத்திற்கு இந்த இன்டர்வியூ மூலம் வேற லெவல் ப்ரோமோஷன் கிடைக்கும் எனத் தெரிகிறது. வரும் 19ஆம் தேதி இந்த இன்டர்வியூ ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் யூட்யூப் பக்கத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்,தெலுங்கு, கன்னடம் ஹிந்தி ,மலையாளம் என பான் இந்தியப் படமாக ரிலீஸ் ஆகும் சலார் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களை அதிர வைத்தது. ஃபர்ஸ்ட் சிங்கிளாக “ஆகாச சூரியனே “பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்பாடல் இரு நண்பர்களுக்கிடையேயான நட்பினைக் கூறுவது போன்ற எமோஷனலான பாடலாக இருந்தது. சலார் படம் எந்தளவுக்கு ஆக்ஷன் படமாக இருக்குமோ அந்த அளவுக்கு எமோஷனலும் இருக்கும் என்று இயக்குனர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் பாக்ஸ் ஆபிஸில் ஒரு பெரிய சம்பவத்தை சலார் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சலார் படத்தின் முதல் டிக்கெட்டை ராஜமௌலி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ