ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி மும்பை பறந்துள்ளார்.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடிகர் செந்தில், தம்பி ராமையா ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இது தான் படத்தின் ஹைலைட். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்தப் படம் கிரிக்கெட் கதைக்களத்தை அடிப்படியாக கொண்டு உருவாகி வருகிறது.
திருவண்ணாமலை, செஞ்சி பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருக்கிறது. இதற்காக ரஜினிகாந்த் மும்பை பறந்துள்ளார். அவர் விமான நிலையத்தில் காணப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Superstar en route to Mumbai for #LalSalaam shoot!
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 7, 2023