விஜய் நடிப்பில் கடைசியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் தவிர பாபி தியோல், நரேன், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் சிவராஜ்குமார் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல் கசிந்தது. அதேசமயம் நடிகை வரலட்சுமி மற்றும்
அசுரன் படத்தில் நடித்த டீஜய் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை அபிராமியை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல நடிகை அபிராமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியான ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடித்திருந்தார். அடுத்தது கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -