Homeசெய்திகள்சினிமாரஜினி, நெல்சன் கூட்டணியின் 'ஜெயிலர் 2'.... ஷூட்டிங் குறித்த தகவல்!

ரஜினி, நெல்சன் கூட்டணியின் ‘ஜெயிலர் 2’…. ஷூட்டிங் குறித்த தகவல்!

-

ரஜினி நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ரஜினி, நெல்சன் கூட்டணியின் 'ஜெயிலர் 2'.... ஷூட்டிங் குறித்த தகவல்!

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்தவர் நெல்சன். இவருடைய முதல் படமே இவருக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது. அதை கடந்த இவர் டாக்டர் திரைப்படத்தை இயக்கி மீண்டும் வெற்றி கண்டார். இருப்பினும் இவர், விஜய் நடிப்பில் இயக்கிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் தனது முயற்சியை கைவிடாமல் இழந்த வெற்றியை திரும்ப பெற வேண்டும் என்ற முனைப்பில் ரஜினிக்காக தரமான கதையை தயார் செய்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கினார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இமாலய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நெல்சன், வேறு எந்த படங்களிலும் கவனம் செலுத்தாமல் ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டு அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் ரஜினி தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருவதால் அந்த படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 திரைப்படத்தில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் வருகின்ற டிசம்பர் மாதம் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ரஜினி, நெல்சன் கூட்டணியின் 'ஜெயிலர் 2'.... ஷூட்டிங் குறித்த தகவல்!அதற்காக வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ தொடர்பான படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறதாம். அதற்கான செட்டுகளும் போடப்பட்டுள்ளதாம். இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அதை இன்னும் ஸ்பெஷலாக மாற்ற புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட இருப்பதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இதற்கிடையில் ரஜினி பிறந்தநாளில் வெளிவரும் அப்டேட்டுகளைக் கொண்டாட ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ