சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் அன்று முதல் இன்று வரை கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் ரஜினி, லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது.
அதாவது பல பெரிய படங்களை தயாரித்து வந்த லைக்கா நிறுவனம் வணிகரீதியாக பல சறுக்குகளை சந்தித்து இருக்கிறது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி போன்ற படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அடுத்தது ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக மோகன்லாலின் எம்புரான் படத்திலிருந்தும் லைக்கா நிறுவனம் விலகியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் லைக்கா நிறுவனத்திற்கு உதவும் வகையில் குறைந்த அளவு சம்பளத்தில் நடிக்க ரஜினி முன் வந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் ரஜினியை சந்தித்து கதை சொன்ன போது ரஜினி அதற்கு நோ சொல்லிவிட்டதாகவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இருப்பினும் ரஜினி என்னதான் லைக்கா நிறுவனத்திற்கு உதவ முன் வந்தாலும், அவர் தன்னுடைய அடுத்த படத்திற்கு வெற்றி பட இயக்குனருடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே லைக்கா நிறுவனத்தின் பைனான்ஸ் பிரச்சனையை சரி செய்ய முடியும் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.