நடிகர் ரஜினி தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் 170 ஆவது படமான இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்கி வருகிறார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி ஹைதராபாத்தில் நடைபெறும் வேட்டையின் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார்.
Superstar #Rajinikanth from the sets of #Vettaiyan🌟
In Cop Uniform 🔥🔥pic.twitter.com/ne3t9OupXS— AmuthaBharathi (@CinemaWithAB) February 28, 2024
அச்சமயம் ரஜினி காக்கிச் சட்டையில், போலீஸ் வேடத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு காரில் வந்து இறங்கியுள்ளார். அப்போது ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்த நிலையில் ரசிகர்களை பார்த்து ரஜினி கையசைத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.