ரஜினி சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார் . அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து வெளியான ஜெயிலர் திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமைந்தது. அந்த வகையில் தரமான சம்பவத்தை செய்திருந்தனர் நெல்சனும் ரஜினியும். அதேசமயம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் கௌரவ தோட்டத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அடுத்ததாக ரஜினி ஜெய் பீம் படம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து ரஜினி தனது 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினி இணைந்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது. அதேசமயம் ஏப்ரல் 2024 இதன் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கின்றன.
இதன் பிறகு ரஜினி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த எதிர்பாராத காம்போவில் உருவாக இருக்கும் இப்படம் தலைவர் 172 படமாக உருவாக இருக்கிறது. மாரி செல்வராஜ் தனது பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் ஸ்ட்ராங்கான மெசேஜை பதிவு செய்திருப்பது போல, தலைவர் 172 படத்திலும் ஸ்ட்ராங்கான மெசேஜை அழுத்தமாக பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் தலைவர் 173 படத்தை மீண்டும் நெல்சன் திலீப் குமார் இயக்க இருக்கிறார். இது ஜெயிலர் 2 படமாக உருவாகும் வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஜெயிலர் 2 படத்தின் மூலம் நெல்சனும் ரஜினியும் மீண்டும் தரமான சம்பவத்தை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் 174 படத்தை இயக்குவதற்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கமிட்டாகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடந்த 2019ல் வெளியான பேட்ட திரைப்படத்தின் ரஜினி மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் சுறுசுறுப்பாக மாஸான லைன் அப்பை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளாரே ரஜினி என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.