Homeசெய்திகள்சினிமாமாஸான டயலாக்குடன் 'லால் சலாம்' டப்பிங்கை நிறைவு செய்த தலைவர்!

மாஸான டயலாக்குடன் ‘லால் சலாம்’ டப்பிங்கை நிறைவு செய்த தலைவர்!

-

- Advertisement -

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முன்னணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. மேலும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமான் இசையிலும் இது தயாராகியுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக லால் சலாம் படத்தின் ரஜினியின் பகுதிகளுக்கான டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினி தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த வீடியோவில், “மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை. மனிதநேயத்தை அதுக்கு மேல வை. அதுதான் நம்ம நாட்டின் உடைய அடையாளம்” என்ற வசனத்துடன் வீடியோ முடிவடைந்துள்ளது. இந்த வசனத்தின் மூலம் ரஜினியின் வித்தியாசமான கோணம் தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ