நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு லால் சலாம் படத்தில் நடித்திருந்தார் இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை டிஜே ஞானவேல் இயக்கியுள்ள நிலையில் படமானது 2024 அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக நடிகர் ரஜினி, கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களின் மூலம் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கூலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க இருப்பதாக சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஜூன் மாதம் தொடங்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. எனவே ஜூலையில் கூலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Look test for #Coolie 🔥
On floors from July pic.twitter.com/ENcvEx2BDj— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 26, 2024
இதனை உறுதி செய்யும் விதமாக லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் டெஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டு படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்பதை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே டீசரில் ரஜினி மிகவும் ஸ்டைலிஷாக காண்பிக்கப்பட்ட நிலையில் இந்த புகைப்படத்திலும் ரஜினி ஸ்டைலிஷான லுக்கில் காணப்படுகிறார். அதிலும் காலா பட லுக்கில் ரஜினி மிரட்டுகிறார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.